செய்திகள் · இலங்கை
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கையருக்குக் கருணை கோரும் மனு ஜனாதிபதியிடம்!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனின் உயிரைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கோரும் கருணை மனு, வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தேசிய மகா சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண ஒன்றியங்களின் சார்பில் செப்டம்பர் 22ஆம் திகதி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டது.
அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தளர்த்துவதற்கோ மாற்றுவதற்கோ இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அதிகாரிகளுடன் இராஜதந்திர மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டுள்ளது.
குறித்த மனுவை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு உடனடியாக அனுப்பிவைத்து, அவரது கவனத்திற்குக் கொண்டுசெல்வதாக வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…