தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

செய்திகள் · இலங்கை · யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கக் குழாய்க்கிணறுகளுக்கு புதிய ஒழுங்குமுறை!

கலந்துரையாடல் மேசையைச் சுற்றி அமர்ந்துள்ளவர்கள்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில், குழாய்க்கிணறுகள் அமைக்கும் நடவடிக்கைகளை முறையான ஒழுங்குமுறைக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் செப்டம்பர் 22ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான கண்காணிப்பின்றி அமைக்கப்படும் குழாய்க்கிணறுகளால் நிலத்தடி நீர்வளத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து ஆராயப்பட்டது.

குழாய்க்கிணறுகளை அமைப்பதற்கான அனுமதி நடைமுறைகளை வலுப்படுத்தவும், தற்போதுள்ள வர்த்தமானி அறிவித்தலில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிநீர்த் தேவைகளுடனும் விவசாய வாழ்வாதாரத்துடனும் தொடர்புடைய நிலத்தடி நீர்வளத்தைப் பாதுகாப்பதே இந்த நடவடிக்கையின் பிரதான நோக்கமாகும்.

விளம்பரம்
← இலங்கைச் செய்திகள்