தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

செய்திகள் · இலங்கை

எட்டு மாகாணங்களில் மின்னணு வாகன வருமானவரி அனுமதிப்பத்திர சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

வாகனங்களும் இலங்கை வாகன வருமானவரி அனுமதிப்பத்திரமும்

மேல் மாகாணத்தைத் தவிர இலங்கையின் ஏனைய எட்டு மாகாணங்களிலும் மின்னணு வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் வழங்கும் eRL 2.0 சேவை செப்டம்பர் 25ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மத்திய, வடமத்திய, வடமேல், தென், கிழக்கு, வடக்கு, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் செப்டம்பர் 28ஆம் திகதி வரை இந்தச் சேவை கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்னணு வாகன வருமானவரி அனுமதிப்பத்திர முறைமையின் செயல்திறன், நிலைத்தன்மை மற்றும் சேவைத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட தொழில்நுட்ப மேம்பாட்டுப் பணிகளே இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தத்திற்குக் காரணமாகும்.

குறித்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பின்னர் செப்டம்பர் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் மின்னணு வருமானவரி அனுமதிப்பத்திர சேவை வழமைபோன்று மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட எட்டு மாகாணங்களில் வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிக்கத் திட்டமிட்டுள்ள வாகன உரிமையாளர்கள் இந்தத் தற்காலிக சேவை இடைநிறுத்தத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

← இலங்கைச் செய்திகள்