spirituality
சிவனடியான் சிந்தனையில் – 1ஆம் பாடல்

சுவாமி சங்கரானந்தா
சிவமும் வாழ்வும் பற்றிய சுவாமி சங்கரானந்தாவின் குறும்பாக்கள்
சித்தமுடன் சிவனடியான் சங்கரனின் வாக்கு
சிரத்தையொடு சீவனதை முழுதாய் ஆக்க
உத்தமதாய் உள்ளமதை உயர்வாய் ஆக்கி
சித்தர்பிரான் சிந்தனைபோல் சிவமாய் ஆக்கும்
பொருள் விளக்கம்
மனமொன்றிச் சொல்லப்படும் வாக்கைச் சிரத்தையுடன் ஏற்றுக் கடைப்பிடிக்கும்போது, உயிர் செம்மை பெறுகிறது. உள்ளம் உயர்ந்து, சித்தர்பிரானின் சிந்தனையைப் போல நமது சிந்தனையிலும் சிவம் வெளிப்படுகிறது.
விரிவான விளக்கவுரை
«சித்தமுடன்» என்பது மனம் ஒன்றிச் சொல்லும் நிலையைக் குறிக்கிறது. «சிரத்தையொடு» என்பது அந்த வாக்கின் பொருளை அக்கறையுடன் உணர்ந்து, உரிய தருணத்தில் வாழ்வில் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது. மனமொன்றிச் சொல்லும் வாக்கும், அதைச் சிரத்தையுடன் ஏற்றுச் செய்யும் செயலும் உள்ளத்தைச் செம்மைப்படுத்துகின்றன.
«உத்தமதாய் உள்ளமதை உயர்வாய் ஆக்கி» என்பது உள்ளத்தை அன்பும் அறமும் நிறைந்ததாகச் செம்மைப்படுத்தி உயர்த்துவதைக் குறிக்கிறது. அந்த உயர்வு நம் சொல்லிலும் செயலிலும் வெளிப்படும்போது, அதைச் «சிவமாய் ஆக்கும்» என என் இந்தப் பாடல் கூறுகிறது.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…