கட்டுரைகள் · ஈழ வரலாறு
முஸ்லீம் ஆயுததாரிகள் காரைதீவில் 40 தமிழர்களை உலகத்தை விட்டு வெளியேற்றி 41 வருடங்கள்!

சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்
1985ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தொடங்கி மூன்று நாட்கள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள காரைதீவு தமிழ்க் கிராமத்தின் மீது முஸ்லீம் ஆயுததாரிகள் இலங்கை காவல்துறையின் விசேட அதிரடிப்படையினரின் ஆதரவுடன் நடத்திய தாக்குதல்கள் நடைபெற்று 41 ஆண்டுகள் கடந்த ஏப்ரலில் நிறைவடைந்துள்ளன.
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்குத் தயாராகிக்கொண்டிருந்த காரைதீவு மக்கள், அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி தொடங்கி 14ஆம் திகதி வரை தங்களுடைய சொந்த மண்ணிலேயே கொடூரமான தாக்குதல்களுக்கு உள்ளானார்கள்.
முஸ்லீம் ஆயுதக் கும்பல்கள் நடத்திய இந்தத் தாக்குதல்களில் 40 தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் நூற்றுக்கணக்கான வீடுகளும் வணிக நிலையங்களும் ஆலயங்களும் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய வீடுகளைவிட்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.
கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர், சம்மாந்துறை போன்ற முஸ்லீம் மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளுக்கு அருகில் அமைந்துள்ள காரைதீவு, அம்பாறை மாவட்டத்தின் பழமையான தமிழ்க் கிராமங்களில் ஒன்றாகும்.
சுவாமி விபுலானந்தர் பிறந்த மண்ணான இந்தக் காரைதீவு, கல்வி, விவசாயம், மீன்பிடி, வணிகம், சமய வழிபாடுகள் எனத் தனித்துவமான வரலாற்றைக் கொண்ட கிராமமாக விளங்கியது.
காரைதீவுத் தமிழர்களுக்கும் அயல் கிராமங்களில் வாழ்ந்த முஸ்லீம் மக்களுக்கும் இடையில் நீண்டகாலமாக வணிகத் தொடர்புகளும் சமூக உறவுகளும் இருந்து வந்தன.
காரைதீவு மக்கள் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்காகக் கல்முனை உள்ளிட்ட முஸ்லீம் வர்த்தகப் பகுதிகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவது வழக்கமாக இருந்தது.
1985ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலையில் தமிழ்ப் புத்தாண்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காகக் காரைதீவிலிருந்து கல்முனைக்குச் சென்ற தமிழர்கள், மாளிகைக்காடு சந்திப் பகுதியில் முஸ்லீம் ஆயுதக் கும்பல்களால் தாக்கப்பட்டனர்.
அந்தப் பகுதியில் காவல்துறையினரும் விசேட அதிரடிப்படையினரும் இருந்தபோதிலும் தாக்குதலுக்குள்ளான தமிழர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் பின்னர் அன்று பிற்பகல் இரண்டு மணியளவில் சுமார் 800 பேர் கொண்ட முஸ்லீம் ஆயுதக் கும்பல் காரைதீவுக்குள் துப்பாக்கிகள், பெற்றோல் குண்டுகள், கத்திகள் மற்றும் பிற ஆயுதங்களுடன் நுழைந்து பிரதான வீதியிலிருந்த தமிழர்களின் வீடுகளையும் வணிக நிலையங்களையும் தாக்கி, வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களைக் கொள்ளையடித்த பின்னர் கட்டிடங்களுக்குத் தீ வைத்தது.
எதிர்பாராத தாக்குதல்களால் அதிர்ச்சியடைந்த தமிழ் மக்கள் குழந்தைகளையும் வயதானவர்களையும் அழைத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர். பல தலைமுறைகளாக வாழ்ந்த வீடுகளும் உழைத்துச் சேர்த்த சொத்துகளும் அவர்களின் கண்களுக்கு முன்னாலேயே தீக்கிரையாக்கப்பட்டன என்பதை விடுதலைப் புலிகள் இஸ்லாமியரை வெளியேற்றி இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் எனக் கூறும் நடுநிலை நக்கிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்து, இந்த முதல் நாள் தாக்குதல்களின்போது காரைதீவின் பழமையான கண்ணகி அம்மன் ஆலயமும் தாக்கப்பட்டு, அந்த ஆலயத்தின் ஒரு பகுதி தீக்கிரையாக்கப்பட்டு, சுற்றுமதிலும் சேதப்படுத்தப்பட்டது என்பதைப் பதிவு செய்கின்றேன்.
பின்னர் ஏப்ரல் 13ஆம் திகதி சனிக்கிழமை இரண்டாவது நாளாகவும் காரைதீவு மீதான தாக்குதல்கள் தொடர்ந்தன.
முதல் நாள் தாக்குதல்களிலிருந்து தப்பிய மக்கள் பாடசாலைகளிலும் பாதுகாப்பான இடங்களிலும் தஞ்சமடைந்திருந்தனர். காலையில் மீண்டும் துப்பாக்கிச் சத்தங்களும் குண்டுவெடிப்புகளும் கேட்டன.
அன்று மீண்டும் சுமார் 500 பேர் கொண்ட ஆயுதக் கும்பல்கள் மூன்று திசைகளிலிருந்து காரைதீவுக்குள் நுழைந்தன.
அதில், கல்முனை–பொத்துவில் பிரதான வீதி வழியாக நுழைந்த கும்பல் வீடுகளையும் கடைகளையும் தாக்கியது. மற்றொரு கும்பல் சித்தானைக்குட்டி சுவாமி ஆலயம் அமைந்துள்ள வடகிழக்குப் பகுதி வழியாக நுழைந்து தாக்குதலைத் தொடர, மூன்றாவது கும்பல் மயில்வாகனம் வீதிப் பகுதியில் தாக்குதல்களை நடத்தியது.
இந்தத் தாக்குதல்களின்போது இந்து ஆலயங்களுக்குள் புகுந்த ஆயுததாரிகள் தெய்வச் சிலைகளை உடைத்ததுடன் ஆலயங்களிலிருந்த பெறுமதியான பொருட்களையும் எடுத்துச் சென்றனர் என்பதோடு, வீடுகளிலும் கடைகளிலும் இருந்த பொருட்களையும் பாரவூர்திகளில் ஏற்றி, பின்னர் அந்தக் கும்பலால் கட்டிடங்களுக்குத் தீ வைக்கப்பட்டது.
அன்றைய தாக்குதல்களில் பல தமிழர்கள் கொல்லப்பட்டு, தமிழ் விவசாயிகள் அறுவடை செய்து சேமித்து வைத்திருந்த நெல் மூட்டைகளும் தீக்கிரையாக்கப்பட, அந்தத் தமிழ் மக்கள் தங்களது வீடுகளையும் வணிக நிலையங்களையும் மட்டுமல்லாது தங்களுடைய வாழ்வாதாரத்தையும் இழந்தனர்.
மீண்டும் ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது நாளாகவும் காரைதீவு மீதான தாக்குதல்கள் முஸ்லீம் ஆயுததாரிகளால் தொடர்ந்தன.
காலை எட்டு மணியளவில் குண்டுவெடிப்புகளுடன் கடற்கரை வழியாக மீன்பிடிப் படகுகளில் காரைதீவுக்கு வந்த முஸ்லீம் ஆயுததாரிகள் காரைதீவின் கிழக்குப் பகுதிக்குள் நுழைந்தனர்.
அவர்கள் கரடித்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், கடைகள், நெல் ஆலைகள், மருந்தகங்கள், மீன்பிடி உபகரணங்கள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றைத் தாக்கி, கணபதி, வீரபத்திரர் உள்ளிட்ட தெய்வங்களின் ஆலயங்களையும் சேதப்படுத்தினர்.
இந்த மூன்றாவது நாள் தாக்குதல்களில் இரண்டு அரசுப் பாடசாலைகளும் ஒரு முன்பள்ளியும் சேதப்படுத்தப்பட்டு, மீன்பிடித் தொழிலாளர்களின் 18 படகுகளும் மீன்பிடி உபகரணங்களும் எரிக்கப்பட்டன.
மூன்று நாட்களாக நடைபெற்ற தாக்குதல்களில் சுமார் 40 தமிழர்கள் கொல்லப்பட்டு, மேலும் பலர் காயமடைந்ததுடன் காணாமலும் ஆக்கப்பட்டார்கள் என்பதோடு, மருத்துவமனை, மருந்தகங்கள், பாடசாலைகள், மீன்பிடிப் படகுகள், உழவு இயந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், மிதிவண்டிகள் ஆகியவற்றுடன் பெருமளவிலான கால்நடைகளும் அழிக்கப்பட்டன.
விசேட அதிரடிப்படையினரின் ஆதரவுடன் முஸ்லீம் ஆயுதக் கும்பல் நடத்திய இந்தக் கோர தாண்டவத்தில் தங்களுடைய வீடுகளையும் உடைமைகளையும் இழந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் பாடசாலைகளிலும் தற்காலிக முகாம்களிலும் தஞ்சமடைந்தனர். உணவு, உடை, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக அவர்கள் பிறருடைய உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
காரைதீவில் நடந்தவை வெறும் இரண்டு சமூகங்களுக்கிடையிலான திடீர் மோதல்கள் அல்ல.
முஸ்லீம் ஆயுததாரிகள் ஒன்று கூடும் இடமான பள்ளிவாசல்களில் கூடி நன்றாகத் திட்டமிட்டு மூன்று நாட்கள் தமிழர்கள் மீது நடத்திய கோரம்.
இவ்வாறான முஸ்லீம் ஆயுததாரிகளின் மிலேச்சத்தனமான நடவடிக்கையினால் தமிழ்–முஸ்லீம் உறவுகளில் ஆழமான பாதிப்புகள் ஏற்பட்டன.
தாக்குதல்களில் ஈடுபட்ட முஸ்லீம் ஆயுததாரிகளுக்கு முஸ்லீம் மக்களே ஆதரவளித்தார்கள் என்பதை விடுதலைப் புலிகளை இனச்சுத்திகரிப்பு செய்தார்கள் எனக் குற்றம்சாட்டும் ஒவ்வொரு முசல்மானும் உணர வேண்டும்.
1990இல் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து சதி செய்திருந்த முஸ்லீம் கும்பலைக் கண்டுபிடித்த பின்னர் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லீம்களுக்கு உடல் காயங்களை ஏற்படுத்தாமலே விடுதலைப் புலிகள் வெளியேற்றினார்கள்.
அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் தேசத்தின் தந்தை அன்ரன் பாலசிங்கமும் அதற்காக வருத்தம் தெரிவித்து, அவர்கள் நிலைமை சுமூகமாகும்போது திரும்பி வரலாம் எனவும் கோரியிருந்தார்கள்.
ஆனால் 1985ஆம் ஆண்டு காரைதீவில் ஆரம்பித்து பல சகாப்தங்களாகத் தமிழர்களைக் கொன்ற இஸ்லாமிய ஆயுததாரிகளைக் கண்டித்து எந்த இஸ்லாமியத் தலைவர்களும் ஒரு அறிக்கை கூட விடவில்லை என்பதோடு வருத்தப்படவே இல்லை என்பதுதான் மிகவும் வருத்தமானது.
சுவாமி சங்கரானந்தா
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…