தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

செய்திகள் · கனடா · ரொறன்ரோ

கனடியப் படையினர் இருவருக்கு 49 குற்றச்சாட்டுகள்: ரொறன்ரோ பொலிஸார் இன்று விளக்கம்

கனடியக் கொடியுடன் கூடிய இராணுவச் சீருடை — விளக்கப் படம்

கனடிய ஆயுதப் படையைச் சேர்ந்த இருவருக்கு மொத்தம் 49 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள வழக்கின் விசாரணை தொடர்பாக, ரொறன்ரோ பொலிஸார் இன்று 2026ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ஆம் திகதி புதன்கிழமை மேலதிக தகவல்களை வெளியிடவுள்ளனர்.

ரொறன்ரோ பொலிஸ் தலைமையகத்தில் உள்ளூர் நேரப்படி முற்பகல் 11 மணிக்கு நடைபெறவுள்ள செய்தியாளர் சந்திப்பில், பொலிஸ் தலைவர் மைரன் டெம்கிவ் மற்றும் குற்றப்புலனாய்வு நடவடிக்கைகளுக்கான தலைமைப் பொலிஸ் அத்தியட்சகர் ஜோ மத்தியூஸ் ஆகியோர் விளக்கமளிக்கவுள்ளனர்.

இந்த விசாரணையில், கனடிய இராணுவத்தின் 7ஆவது ரொறன்ரோ பீரங்கிப் படைப்பிரிவைச் சேர்ந்த சச்சிந்த பெர்னாண்டோ மற்றும் ஜேம்ஸ் மொரோ ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவரும் இராணுவத்தின் ஒதுக்குப்படையில் பணியாற்றுபவர்கள்.

22 வயதான பெர்னாண்டோவும் 29 வயதான மொரோவும் கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி கைது செய்யப்பட்டனர். பணயப்பணம் கோரி ஆட்கடத்தல், சட்டவிரோதமாக ஒருவரை அடைத்து வைத்திருத்தல், குற்றச்செயலின்போது துப்பாக்கியைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் 49 குற்றச்சாட்டுகளை இருவரும் எதிர்கொள்கின்றனர்.

கைதுகளைத் தொடர்ந்து இருவரும் இராணுவப் பணிகளில் இருந்து விலக்கப்பட்டுள்ளதுடன், இராணுவ உபகரணங்கள், நிலையங்கள் மற்றும் தளங்களுக்கான அவர்களது அணுகலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கனடிய தேசிய பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், அவர்களது தொடர்ச்சியான சேவை தொடர்பான நிர்வாக மீளாய்வு முடிவடையும் வரை இருவரும் கனடிய ஆயுதப் படையின் உறுப்பினர்களாகவே நீடிக்கின்றனர்.

இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டவை அல்ல. ஆட்கடத்தல் விசாரணையின் முன்னேற்றம் தொடர்பான விவரங்கள் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்படவுள்ளன.

← கனடா செய்திகள்