நையாண்டி / கருத்து
சவூதி அரேபியாவில் ‘தஅஸீர்’ அடிப்படையில் பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு மரண தண்டனை!

இஸ்லாமிய மரபில், குறிப்பாக சுன்னி முஸ்லிம்களிடையே, மிகுந்த மதிப்பும் சமய அதிகாரமும் கொண்ட சஹீஹ் அல்-புகாரி, ஹதீஸ் போன்ற நூல்களின் எண் 5133 மற்றும் 513 யின் ஆதரப்படி,
50 வயது நபி அல் சலாம் அவர்கள் 6 வயது குழந்தையான ஆயிஷாவை திருமணத்துற்கு ஒப்பந்தமாக்கி,
அந்த ஆயிஷா என்ற குழந்தைக்கு ஒன்பது வயதாக இருக்கும் போது, இல்லற வாழ்வைத் தொடங்கியதாகக் கூறப்படும் இறைத்தூதர் நபி இறைவன் கூறினார் எனக் கூறிய நபிமரபு
சட்ட விளக்கங்களுடன், மார்க்கத்தின் பெயரால் தலைதூக்கியிருக்கும் இந்த மூர்க்கத்தனம், இன்னும் எத்தனை உயிர்களைப் பலிகொள்ளப் போகிறதோ!
“கடவுள் சொன்னார்”, “நபி சொன்னார்”, “ஹதீஸில் உள்ளது” என்று கொலைக்குக் காரணம் தேடி, உயிர்களைப் பறிப்பது அறமா? இல்லை, உயிர்களை வதைத்து உதிரம் சிந்த வைப்பதுதான் இறைநெறியா?
மனிதநேயத்தை மறந்து, மதவெறியை வளர்த்து, மண்ணில் உயிர்களை மாய்ப்பதுதான் மார்க்கமா?
வாளைத் தூக்கி, வன்முறையைப் போற்றி, மதத்தின் பெயரில் மரணத்தை விதைக்கும் கொடூரச் சிந்தனை 1,400 ஆண்டுகள் தாண்டியும் மாறவில்லையோ? நாகரிக உலகோடு கலந்தும் மறையவில்லையோ?
நவீன உலகிலேயே இவர்கள் இப்படி இருக்கின்றார்கள் என்றால், ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருப்பார்கள் என்பதைச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…