செய்திகள் · இலங்கை
திலீபனின் 39ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் அடையாள உண்ணாவிரதம்!

திலீபனின் 39ஆவது நினைவு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் செப்டம்பர் 25ஆம் திகதி பல்கலைக்கழக முன்றலில் அடையாள உணவு தவிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்களுடன் சமயப் பிரதிநிதிகள், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு பொலிஸார் சென்று மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டதுடன், நிகழ்வில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் உணவும் நீரும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.
தொடர்ந்து 12 நாட்கள் நீடித்த இந்த உண்ணாவிரதத்தின் பின்னர் செப்டம்பர் 26ஆம் திகதி அவர் உயிரிழந்தார்.
அவரது 39ஆவது நினைவு நாளை முன்னிட்டு யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு–கிழக்கின் பல பகுதிகளில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…