தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

ஈழ மண்ணின் முத்துக்கள்

ஈழ மண்ணின் முத்துக்கள் – புதிய வரலாற்றுப் பதிவு!

ஈழ மண்ணின் முத்துக்கள் – புதிய வரலாற்றுப் பதிவு!

அன்பு உறவுகளே!

ஈழ மண்ணில் வாழ்ந்து கல்வி, கலை, இலக்கியம், சமயம், மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் தடம் பதித்த பெருமைமிகு முன்னோர்களின் வாழ்க்கையையும், அவர்கள் ஆற்றிய அர்ப்பணிப்புமிக்க தொண்டுகளையும் நினைவுகூரும் நோக்கத்துடன், ஈழ மண்ணின் சுவடுகள் இணைய இதழில் “ஈழ மண்ணின் முத்துக்கள்” என்ற புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

எமது மண்ணின் வரலாற்று ஆளுமைகளை முத்துக்களாகக் கோர்த்து, அவர்களது வாழ்க்கை வரலாறுகளை மாவட்டவாரியாக ஆவணப்படுத்துவதே இம்முயற்சியின் நோக்கமாகும்.

இந்த வரலாற்றுப் பணியில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த உறவுகள் தமது மண்ணின் பெருமைக்குரிய மனிதர்களைப் பற்றிய ஆக்கங்களையும், புகைப்படங்களையும், வரலாற்றுத் தகவல்களையும் அனுப்பி ஒத்துழைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.

இந்த முயற்சியை எமது திருகோணமலை மண்ணின் முத்துக்களை நினைவுகூர்வதன் மூலம் ஆரம்பிக்கின்றேன்.

எமது முன்னோர்களின் பெருமைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வோம்!

சுவாமி சங்கரானந்தா 🙏
பிரதம ஆசிரியர் – ஈழ மண்ணின் சுவடுகள்

← பிரிவுக்குத் திரும்ப