செய்திகள் · இந்தியா · தமிழ்நாடு
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: அக்டோபர் 6 வாக்குப்பதிவு


தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் தேதியைத் தலைமைத் தேர்தல் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்கும் அக்டோபர் மாதம் 6ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கின்றது.
இந்த இரு தொகுதிகளுக்கும் வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் மாதம் 9ஆம் திகதி தொடங்கி, செப்டம்பர் மாதம் 16ஆம் திகதி முடிவடைந்தது.
அக்டோபர் மாதம் 9ஆம் திகதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக இருந்தாலும், இவ்விரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வழக்கு காரணமாக மற்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்ற சத்யபாமா ஆகிய இருவரும் அதிமுக எம்.எல்.ஏ.க்களாகச் சட்டசபைக்குச் சென்றாலும், பின்னர் இருவரும் அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் ஐக்கியமானதன் காரணமாகவே இந்த இடைத்தேர்தல் நடக்கின்றது.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற கடந்த சட்டமன்றத் தேர்தலில், மதுராந்தகத்தில் நாதக வேட்பாளர் 4,950 வாக்குகள் (2.5%) பெற்றார்; தாராபுரத்தில் நாதக வேட்பாளர் 6,026 வாக்குகள் (3.01%) பெற்றார். இரு தொகுதிகளிலும் நாதக வேட்பாளர்கள் கட்டுக்காசைத் தக்கவைக்கத் தேவையான வாக்குகளைப் பெறவில்லை. அதிமுக, தவெக, திமுக வேட்பாளர்கள் அந்த வரம்பைத் தாண்டினர்.
வரவிருக்கும் இடைத்தேர்தல் குறித்த ஆசிரியர் கணிப்பு
அவர்கள் இருவரும் மீண்டும் வெற்றி பெற்று, தவெக எம்.எல்.ஏ.க்களாகச் சட்டசபைக்குச் செல்வதே சாத்தியமானதாகும். இந்த இடைத்தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கட்டுக்காசுகளை எடுத்தாலும், திராவிடத்தை மறைமுகமாக ஆதரித்துவரும் நாம் தமிழர் கட்சியின் மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் ஜானகிராமன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தாராபுரம் தொகுதி வேட்பாளர் கார்த்திகா ஆகியோர் தமிழ் மக்களால் நிராகரிக்கப்படப்போவது நிதர்சனமாகும்.

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…