தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

கட்டுரைகள் · ஈழ வரலாறு

யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் 15 நாள் போர்: மறக்கப்படாத துயரங்கள்!

யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்தின் 15 நாள் போர்: மறக்கப்படாத துயரங்கள்!

1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையான இன்றைக்கு 39 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி, அவர்களிடமிருந்து ஆயுதக் களைவினை மேற்கொள்ள இந்திய இராணுவத்தால் எடுக்கப்பட்ட முதல் நடவடிக்கை தடுக்கும் விடுதலைப் புலிகளின் யுத்தம், 10 ஆம் திகதி யாழ்ப்பாணக் கோட்டைப் பகுதியில் முன்னேற முயன்ற இந்தியப் படையுடன் ஏற்பட்ட நேரடி மோதலுடன் ஆரம்பமானது.

அந்த மோதலில் வீமன்காமம் வடக்கு, தெல்லிப்பழையைச் சேர்ந்த, அன்ரன் என்ற இரத்தினம் பரமேஸ்வரன் என்ற விடுதலைப் புலிகளின் போராளி முதல் வித்தாகி வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இந்திய அமைதிப்படையின் முதன்மைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் திபிந்தர் சிங் கடமையாற்றிய பொழுது,

இந்திய இராணுவத்தின் 54th Infantry Division பிரிவுக்கு மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் தலைமை தாங்கிய நிலையில்,

இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைமையை முடக்கும் நோக்குடன் Operation Pawan என்ற பெயரில் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

இராணுவ நடவடிக்கையின்போது, இந்திய இராணுவத்தின் உயரடுக்கு சிறப்புப் படையான 9 ஆவது பாரா சிறப்புப் படைப்பிரிவின் (9 Para SF) முக்கியப் பொறுப்புகளில் மூன்று முக்கிய அதிகாரிகள் பணியாற்றி, விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது மாலை போட்டு வரவேற்ற தமிழ் மக்களுக்கும் பாரிய இழப்பை ஏற்படுத்தினார்கள்.

இதில் கேணல் எஸ். எஸ். மான் (S. S. Mann) களமிறங்கிய இந்தியச் சிறப்புப் படைகளின் தளபதியாக (Commander SF) இருந்து மூலோபாயத் திட்டங்களை வகுத்தார்.

அவருக்கு உறுதுணையாக லெப்டினன்ட் கேணல் எஸ். பி. கண்ணா (Shashi Bhushan Khanna) இந்திய இராணுவத்தின் 9 ஆவது சிறப்புப் படைப்பிரிவின் (9 SF) இரண்டாம் நிலைத் தளபதியாக இருந்து, இந்திய இராணுவத்தின் 65 ஆவது கவசப் படைப்பிரிவுக்கும் கட்டளை அதிகாரியாகக் களமிறங்கினார்.

இவர்கள் இருவருடனும் கேணல் ஹர்தேவ் சிங் லிட்டர் (Hardev Singh Lidder) 9 ஆவது பாரா சிறப்புப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்து (Commanding Officer - CO) மிக ஆக்ரோஷமாக அமைதிப்படையை வழிநடத்தினார். இந்த மூவராலும் யாழ்ப்பாண மண்ணே சுடுகாடானது.

அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வரையான 15 நாள் போரில் லெப்டினன்ட் கேணல் சந்தோசம், மேஜர் அசோக், கப்டன் கனகசபை உட்பட மேலும் சில தரநிலைப் போராளிகளும், 2 ஆம் லெப்டினன்ட் மாலதி உட்பட 4 பெண் போராளிகளுமாக 52 மாவீரர்கள் வீரச்சாவினைத் தழுவிக்கொண்டார்கள் என்பதோடு,

அதே 15 நாட்களில் 500க்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டு, 1000க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பங்கள் பெரும் அவலங்களைச் சந்தித்தன.

அன்று இந்திய அமைதிப்படை என்ற பெயரில் வந்து ஈழத் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்களுக்குக் காரணமான,

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்ட அத்தனை கட்டளை அதிகாரிகளும் பதவி உயர்வு பெற்றுக்கொண்டனர் என்றாலும், ஈழத் தமிழ் மக்கள் அந்தக் கொடூரங்களுக்கான நீதியையோ அல்லது தாங்கள் போராடிக் கேட்ட நியாயமான உரிமையையோ பெற்றுக்கொள்ளவில்லை என்பதை இந்திய அரசு உணர்ந்து, ஈழத் தமிழ் மக்களுக்குத் தேவையான நீதியை நிலைநிறுத்துவது தார்மீகக் கடமையாகும்.

சுவாமி சங்கரானந்தா 🙏

← பிரிவுக்குத் திரும்ப