1956–1976 · ஆசிரியர் கட்டுரை
1956ஆம் ஆண்டின் மொழியுரிமைப் போராட்டமும் தமிழர்கள் மீதான வன்முறைகளும்!

1956 ஆம் ஆண்டு, சிங்கள தேசத்தின் பிரதம மந்திரி எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜூன் மாதம் 5ஆம் திகதி “தனிச் சிங்கள” மசோதாவை மக்கள் பிரதிநிதிகள் சபையில் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து,
தலைநகர் கொழும்பின் காலிமுகத்திடலில் தமிழர்களினால் நடத்தப்பட்ட அகிம்சைப் போராட்டம், சிங்கள பௌத்த பேரினவாத மேலாண்மை உள்ள இனவாத சிங்களவர்களால் குழப்பப்பட்டு, தமிழ் சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டார்கள்.
இதனைத் தொடர்ந்து, அப்பாவித் தமிழர்கள் மீது சிங்கள பௌத்த பேரினவாதிகளால் நடைபெற்ற “இங்கினியாகலை படுகொலை” என்று, 150க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட வரலாறு பதிவு செய்யப்பட்டாலும்,
அந்தக் கொடூர வன்மத்தின் அடையாளமாக, அதே காலப்பகுதியில் பேரினவாத மனோநிலை கொண்ட பயங்கரவாதச் சிங்களவர்களால் அப்பாவித் தமிழர்கள் மீது நடைபெற்ற வேறு சில படுகொலைகளும் வன்முறைத் தாக்குதல்களும் பதிவு செய்யப்படாததால், அவற்றில் சிலவற்றைப் பகிர்ந்து,
புலிகள் அழிந்ததால் நாடு சமத்துவம் அடைந்து விட்டது என்ற தோரணையில் தமது கருத்துக்களைக் கொட்டும் சிங்களவர்கள், அவர்களின் சிங்கள மூதாதையர்கள் எவ்வளவு கொடூரக் கொலை வெறியர்கள் என்று அறியப் பதிவு செய்கின்றேன்.
அன்பு உறவுகளே!
எங்கள் தமிழ் தாய்மொழிக்கு ஏற்பட்ட இன்னல் கண்டு,
இலங்கை என்ற நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள்,
சத்தியத்தின் வழி நின்று சாந்தியைக் கடைப்பிடிக்க,
சத்தியாக்கிரகம் என்னும் ஆயுதத்தின் மூலம் அறப்போர் செய்யலாம் என எண்ணினார்கள்.
அந்த வகையில் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரக அறப்போர் செய்யப் பெரும் படையை அனுப்பிய யாழ்ப்பாண மக்கள்,
யாழ்ப்பாண நகர மண்டபத்தில் கறுப்புக் கொடியை ஏற்றி, தமது எதிர்ப்பைத் தெரிவித்த போது,
யாழ்ப்பாண மாவட்டத்தின் பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள்,
தமது ஊர்களில் உள்ள ஆலயங்கள் தோறும் உண்ணாவிரதம் இருந்து தமது இன உணர்வை வெளிப்படுத்தினார்கள்.

திருகோணமலை மண்ணில் ஆண்கள், பெண்கள்,
மாணவர்கள், மாணவிகள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், வழக்கறிஞர்கள் என ஆயிரம் பேர் திரண்டு,
காலை ஒன்பது மணியளவில் ஊர்வலமாகப் புறப்பட்டு,
அந்தோனியார் கோவிலுக்குப் போய் பிரார்த்தனை செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு,
பெருந்தெரு, காசுக்கடைத் தெரு, மத்திய வீதி, தபால் வீதி ஆகிய வீதிகளால் வலம் வந்து,
முற்றவெளியில் இருக்கும் இஸ்லாமியர் வணங்கும் இடமான “ஆலியப்பா கபுறடி”க்கு வந்தடைந்து அங்கும் பிரார்த்தனை செய்துவிட்டு,
காளி கோயிலிலும் வழிபட்டு,
நகரசபை முன்பாக அமைதியாக அமர்ந்து சத்தியாக்கிரகத்தை மேற்கொண்டார்கள் என்றாலும்,
காலை தொடக்கம் மாலை வரை நடைபெற்ற இந்த அறப்போராட்டத்திற்கு எதிராக மாலை நேரத்தில் காவல்துறையின் லத்தியும் பங்குபற்றியது.
திருகோணமலை நிலவரம் இவ்வாறு இருக்க,
மட்டக்களப்பு மண்ணில் “சிங்களம் மட்டும்” மசோதாவுக்கு எதிராக,
தமிழர்களின் மொழி உரிமைக்கான அறவழிப் போராட்டம்,
கடைகள் மூடப்பட்டு,
கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு,
பாடசாலைகளுக்கு பிள்ளைகள் சமூகம் கொடுக்காது, முழு இன உணர்வுடன் எழுச்சியாக கல்லடி, மஞ்சந்தொடுவாய், காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு, ஏறாவூர், செங்கலடி என அறவழியில் அனுஷ்டிக்கப்பட்டு வந்த வேளையில்,
தாண்டவன்வெளியில் சிங்களக் காடையர்களினால் எரிக்கப்பட்ட தமிழர் வீட்டைப் பாதுகாக்கத் திரண்ட தமிழர்களை நோக்கி,
பெரிய புல்லுமலையைச் சேர்ந்த றபயையல் என்ற கிறிஸ்தவ சிங்களப் பேரினவாதி துப்பாக்கியால் சுட்டதில்,
ராஜேந்திரா மற்றும் தங்கராஜா ஆகிய இரு தமிழர்கள் கொல்லப்பட்டு,
ஆறு வயது சிறுமி உட்பட மேலும் ஐவர் படுகாயமடைந்தார்கள்.
இவ்வாறு அப்பாவித் தமிழர்களைக் கொடூரக் கொலை செய்த றபயையல் என்ற இனவெறிச் சிங்களவன்,
நீதிமன்றம் கொண்டு செல்லப்படாமலேயே சிங்கள பௌத்த மேலாதிக்க மனோநிலை கொண்ட சிங்கள தேசத்து காவல்துறையால் விடுவிக்கப்பட்டான் என்ற செய்தியை,
தமிழர்களின் பதிவுகளில் வந்து நடுநிலை, நியாயம் பேசும் சிங்களவர்களுக்கும், அந்தச் சிங்களத்தின் அடிவருடிகளாக வாழும் ஈனத் தமிழர்களுக்கும் கூறி, தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என்பதைப் பதிவு செய்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…