தமிழ் இணையச் சஞ்சிகைவரலாறு · அரசியல் · உலகப் பார்வை

ஈழ மண்ணின் சுவடுகள்

வரலாற்றைப் பதிவு செய்வோம் · ஆதாரங்களைப் பாதுகாப்போம்

விளம்பரம்

கட்டுரைகள் · நையாண்டி / கருத்து

கட்டுக் கதை கட்டும் ஒட்டுக்குழு அங்கிள்மார்!

கட்டுக் கதை கட்டும் ஒட்டுக்குழு அங்கிள்மார்!

புலி வெறுப்பில் பிதற்றும் ஒட்டுக்குழுக்களின் அங்கிள்மாரின் கதைகளைக் கேட்டால், ஆரம்பகால ஆயுதப் போராட்ட வரலாற்றின் மொத்த வடிவத்தைத் தாங்கள்தான் எடுத்திருந்தது போலப் பேசுகின்றார்கள்.

அவர்களின் அந்தக் கதைகளில் ஒரு விசேடம் இருக்கின்றது.

அதில் அங்கிள்மார் எப்போதும் கதாநாயகர்கள்; வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்போதும் வில்லன்.

கதையின் சம்பவங்கள் மாறலாம்; ஆனால் இந்த ஏற்பாடு மட்டும் ஒருபோதும் மாறக்கூடாது!

அவர்களின் அந்தப் பெருமைக் கதைகளுக்கு நடுவே இவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள்தான்,

1980ஆம் ஆண்டு இயக்கப் பிளவுக்குப் பின்னர் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் டெலோவில் சேர்ந்தார் என்பதும்,

1981ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் திகதி நடைபெற்ற நீர்வேலி பணக் கொள்ளைக்குப் பின்னர் குட்டிமணி–தங்கத்துரையை அவரே காட்டிக்கொடுத்தார் என்பதும் ஆகும்.

ஒட்டுக்குழு அங்கிள்மாரே!

உங்கள் கதையின்படியே உங்களிடம் ஒரு கேள்வி.

1980ஆம் ஆண்டு டெலோவில் இணைந்த பிரபாகரன், 1981ஆம் ஆண்டு தங்கத்துரை–குட்டிமணியைக் காட்டிக்கொடுத்தவர் என்றால், தங்கத்துரைக்குப் பின் தலைவரான நெட்டை சிறி என்ற சிறிசபாரத்தினம்,

1982ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி சுந்தரம் என்ற சதாசிவம் சிவசண்முகமூர்த்திக்கு வழங்கப்பட்ட மரணதண்டனைச் சம்பவத்திற்கான காரணங்களை விளக்கிப் புலிகள் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தை இந்தியாவிலிருந்து ஏன் கொண்டுவந்தார்?

தங்கள் தலைவர்களைக் காட்டிக்கொடுத்தவருடைய இயக்கத்திற்குப் பிரசுரம் கொண்டுவரும் அளவுக்கு அவர்களுக்கிடையில் என்ன உறவு இருந்தது?

அந்த இடத்தையும் கொஞ்சம் விளக்குங்கோ!

ஒரு பக்கத்தில் பிரபாகரனைக் காட்டிக்கொடுத்தவர் என்கின்றீர்கள். மறுபக்கத்தில் அவரது இயக்கத்தின் பிரசுரத்தைச் சிறிசபாரத்தினம் கொண்டுவந்ததாக வரலாறு இருக்கின்றது.

கதை சொல்லும்போது கொஞ்சம் கணக்கையும் பார்த்துச் சொல்ல வேண்டாமா அங்கிள்மாரே?

← நையாண்டி