கட்டுரைகள் · அரசியல்
அன்று மக்களை வீதிக்கு அழைத்த அமைப்புகள், இன்று கையெழுத்துக் கேட்க முன்வருமா?

2008ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இலங்கையில் போர் தீவிரமடைந்தபோது, புலம்பெயர் தமிழர்கள் போருக்கு எதிராகக் குரல் எழுப்பத் தொடங்கினார்கள். 2009ஆம் ஆண்டு மே மாதம் வரை நீடித்த அந்தப் போராட்டங்கள் கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து எனப் பல நாடுகளிலும் நடைபெற்றன.
குறிப்பாக, கனடாவில் நடந்த பேரணிகளில் “We want Tamil Eelam!”, “Our leader Prabhakaran!” என்ற முழக்கங்களுடன், அந்தப் போரினால் வன்னியில் சிக்கியிருந்த தமிழ் மக்களைப் பாதுகாக்குமாறு உலக நாடுகளிடம் கோரிய அந்தப் புலம்பெயர்ந்த மக்கள், தமிழீழத்திற்கான தமது ஆதரவையும் வெளிப்படுத்தினார்கள்.
அன்று அந்த மக்களை வீதிகளில் இறக்கிப் போராட அழைத்த கனடாவில் இருக்கும் புலம்பெயர் தமிழ்த் தேசிய அமைப்புகள், இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரும் மனுவைத் தயாரித்து, அதே மக்களிடம் கையெழுத்துத் திரட்டுவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன?
பிரித்தானியாவில் தடையை நீக்கக் கோரி ஏற்கெனவே சட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அதனை மேலும் வலுப்படுத்தத் தடையை நீக்கக் கோரும் மனுவைத் தயாரித்து, அதே மக்களிடம் கையெழுத்துத் திரட்டுவதில் ஏன் தயக்கம் காட்டுகின்றன?
இதனை ஒருங்கிணைத்து ஒரு கையெழுத்து இயக்கத்தை ஆரம்பித்து, கனடா, பிரித்தானியா மட்டுமல்லாது சுவிஸ், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் உள்ள அமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை ஆகும்.
இவ்வாறான கையெழுத்து இயக்கம் ஆரம்பிக்கப்பட்டால், இவ்வாறான கையெழுத்துகளை ஊர்மக்கள் ஒன்றுகூடலிலும் கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் நடைமுறைப்படுத்துவது சாத்தியமாகும் என்பதை உணர்ந்து, அன்று மக்களை வீதிக்கு அழைத்த அமைப்புகள் இன்று அவர்களிடம் கையெழுத்துக் கேட்க முன்வருமா என்ற கேள்வியை ஒரு தமிழ்த் தேசியவாதியாக அந்த அமைப்புகளிடம் ஏக்கத்துடன் முன்வைக்கின்றேன்.
சுவாமி சங்கரானந்தா 🙏

வாசகர் கருத்துகள்
கருத்துகள் ஏற்றப்படுகின்றன…